ETV Bharat / state

’ஜவ்வரிசி கலப்படத்தை தவிர்க்க ஆலைகளில் சிசிடிவி கேமராக்கள்’ - தமிழ்மணி

சேலம்: ஜவ்வரிசியில் கலப்படத்தைத் தவிர்க்க சேகோ ஆலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளதாக சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 21, 2020, 9:05 PM IST

தமிழ்மணி
தமிழ்மணி

சேலம் மாமாங்கத்தில் இன்று (அக்.,21) சேகோசர்வ் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். இதில் வேளாண்மைத் துறை இயக்குநர் சதீஷ் முன்னிலை வகித்தார்.

சேலம், தர்மபுரி, நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மரவள்ளி கிழங்கு உற்பத்தியாளர்கள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி, ”ஜவ்வரிசி உணவு வகைகளை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிநாடுகளிலிருந்து ஸ்டார்ச் இறக்குமதி செய்யப்படுவதை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஜவ்வரிசியில் கலப்படம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதற்கு தற்போது வாய்ப்புகள் இல்லை.

சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி பேசிய காணொலி

ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சேகோ ஆலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி அனைத்தும் சேகோசர்வ் கொண்டுவரப்பட்டால் தூய்மைப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டு நிலையான லாபம் தரும் விலைக்கு விற்பனை செய்யப்படும்” என்றார்.

இதையும் படிங்க:தீபாவளிக்குள் நியாயவிலை கடைகளில் ஜவ்வரிசி விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.