ETV Bharat / state

6 சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து விற்பனை - உரிமையாளர் கண்ணீர் புகார் - சேலம் கார் திருட்டு

சேலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cars-theft-issue-in-salem
cars-theft-issue-in-salem
author img

By

Published : Aug 31, 2021, 11:11 AM IST

சேலம்: மல்லமூப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் 20 சொகுசு வாகனங்களைக் கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரிடம் ஓட்டுநராகப் பணியாற்றிவந்த வினோத் என்பவர், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு வாடகைக்கு கார் வேண்டும் என்று கூறி ஆறு சொகுசு கார்களை பாலாஜியிடமிருந்து வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

வெகு நாள்களாகியும் வாடகை தராமலும், கார்களைத் திருப்பிக் கொடுக்காமலும் வினோத் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பாலாஜி, வினோத் கொடுத்திருந்த முகவரிக்குச் சென்று பார்த்தபோது அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பே அப்பகுதியிலிருந்து வீட்டை காலிசெய்து தலைமறைவாகியது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

உரிமையாளர் கண்ணீர் புகார்
உரிமையாளர் கண்ணீர் புகார்
இதனையடுத்து, சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பாலாஜி, அவரின் சகோதரர் மாயக்கண்ணன் ஆகியோர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்துச் சென்று விற்பனைசெய்த வினோத் மீது நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தரும்படி புகார் மனு அளித்தனர்.
உரிமையாளர் கண்ணீர் புகார்
வினோத் முன்னதாகவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், நிலுவையில் உள்ள வழக்கு சம்பந்தமாக நேற்று (ஆகஸ்ட் 30) சூரமங்கலம் காவல் நிலையம் வந்தார். அதனை அறிந்த பாலாஜி, அவரது உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வந்து அவரைக் கைதுசெய்து கார்களை மீட்டுத் தரும்படி காவல் நிலையத்தில் காத்திருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.