சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தின்னப்பட்டியிலிருந்து சேலம் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி தனியார் பேருக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது காமலாபுரம் அருகே பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளாகியதில், பேருந்தில் பயணித்த தும்பிபாடியைச் சேர்ந்த சத்யா, அவரது தாயார் சந்திரா உட்பட 3 பயணிகள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஓமலூர் காவல்துறையினர் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .விபத்து குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் கூறும்போது,' சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தின் நிர்வாகக் கவனக் குறைவே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என குற்றம்சாட்டினார்.