ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து மாநாடுகள் நடத்தப்படும் - பாஜ மாநில தலைவர் எல். முருகன்!

பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் சேலத்தில் தெரிவித்தார்.

பாஜ மாநில தலைவர் எல். முருகன்
பாஜ மாநில தலைவர் எல். முருகன்
author img

By

Published : Jan 25, 2021, 5:25 AM IST

சேலம்: சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பந்தல் அமைக்கும் பணியினை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று (ஜன.24) தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிப்ரவரி மாதம் முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞரணி, மகளிர் அணி, ஓபிசி அணிகள் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் சார்பில் மாநாடுகள் நடத்தப்பட்டு மார்ச் மாதம் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது.

இந்த மாநாடுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாடு தமிழ்நாட்டு அரசியலில் தாக்கத்தை உருவாக்கும். தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் அதிக அளவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.

மத்தியில் நல்லாட்சி நடத்தும் பிரதமர் மோடியின் நல்லாட்சி, தமிழ்நாட்டிலும் வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் அதிக அளவில் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். பாஜகவின் வேல் யாத்திரை வெற்றியடைந்துள்ளது. யாரெல்லாம் யாத்திரையை விமர்சித்தார்களோ, அரசியல் யாத்திரை என்று கூறினார்களோ, அவர்களே கையில் வேலை தூக்கும் கட்டாயத்தினை, வேல் யாத்திரை உண்டாக்கி விட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேலை தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்து மத நம்பிக்கையை தொடர்ந்து அவமதித்து விட்டு, தற்போது என்ன வேடம் போட்டாலும் அதனை மக்கள் நம்பமாட்டார்கள்.

தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்பது வேல் யாத்திரையின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்றி அரசு விடுமுறை அறிவித்ததுடன் பொது விடுமுறை பட்டியலிலும் இணைத்த முதலமைச்சருக்கு எங்களது நன்றியை தெரிவிக்கிறோம்.

வரும் 27ஆம் தேதி தைப்பூச தினத்தன்று நானும் தமிழ்நாடு பாஜக மேலிட பார்வையாளர் சி.டி.ரவியும்விரதமிருந்து காவடி எடுக்க இருக்கிறோம். தமிழ் கடவுளை யார் இழிவு படுத்தினாலும் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே தட்டி கேட்டு வருகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்ற இடமெல்லாம் தோல்வியைத்தான் கொடுத்து வருகிறார். அவருடைய தமிழ்நாடு வருகை அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவருடைய கட்சிக்கு தமிழ்நாட்டில் சில எம்பிக்கள் உள்ளனர். அதுவும் இல்லாமல் போகப் போகிறது. திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம். தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணி உடையும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் மிக்க, வலிமையான கூட்டணியாக உள்ளது. கூடுதலாக சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது" என்றார்

இதையும் படிங்க: வேல் கொண்டு போலி நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்’ - எல்.முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.