தமிழ்நாடு பாஜகவின் இளைஞரணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை (பிப்.21) நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனி விமானம் மூலம் சேலம் வருகிறார். மத்திய அமைச்சரின் வருகையையொட்டி சேலத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு படையினர் 20 பேர் சேலத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
திறந்தவெளியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன், இளைஞரணி தலைவர் வினோஜ், பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையிலும், வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னணி - பால்வளத்துறை அமைச்சர் பெருமிதம்