ETV Bharat / state

கிருமி நாசினி மருந்து தெளிக்கும் ராட்சத இயந்திரம் சேலத்தில் அறிமுகம்

author img

By

Published : Apr 12, 2020, 10:00 AM IST

சேலம்: ராட்சத இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நான்கு மண்டலங்களிலும் நடைபெறும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்தார்.

sanitizer
sanitizer

சேலம் மாநகராட்சி சார்பில் வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகள் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு நவீன கிருமி நாசினி மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் புதிதாக வாங்கப்பட்டு அவை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் செயல்பாட்டினை மாநகராட்சி ஆணையர் சதீஷ் மற்றும் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் பேசுகையில், "சேலம் மாநகராட்சி பகுதியில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சேலத்தில் உள்ள நான்கு மண்டலங்களிலும் உள்ள குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், மாநகராட்சி அலுவலகக் கட்டடங்கள், அம்மா உணவகங்கள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் மற்றும் கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிருமி நாசினி மருந்து தெளிக்கும் இராட்சத இயந்திரம்

தற்போது, நான்கு மண்டலங்களிலும் ராட்சத இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இனி வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி வாகனங்களுககு புதிய கட்டுப்பாடு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.