சேலத்தில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் மாவட்ட வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விக்கிரமராஜா, " தமிழ்நாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டிசம்பர் 17ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தற்போது வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய் அளவுக்கு விற்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வெங்காயத்தின் இந்த விலை ஏற்றத்திற்கு அரசுகள் தான் காரணம். உள்நாட்டில் வெங்காயத்தின் தேவை எந்த அளவிற்கு இருக்கிறது என்ற புள்ளி விவரங்களை அரசு அலுவலர்கள் வைத்திருக்க வேண்டும். அதன்படி வெங்காயத்தை விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால் அலுவலர்களிடம் அதுபோன்று புள்ளிவிவரங்கள் இல்லாததாலும் வெங்காயத்தை சேமித்து வைக்க மிகப்பெரிய அளவில் கிடங்குகள் இல்லாததினால், இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது .
இதையும் படிங்க: சாலையில் நடந்து சென்ற 7 பேரை வரிசையாக கடித்த வெறி நாய்!