சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கண்ணன். தனது மகள் நிவேதாவின் தலைப்பிரசவத்திற்கான வளைகாப்பை வெகுவிமரிசையாக நடத்த முடிவெடுத்துள்ளார். ஆனால், தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவர் திட்டமிட்டப்படி நடத்த முடியவில்லை.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் அனைவருக்காகவும் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கண்ணனின் இல்லத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு தனது கையாலேயே அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள் மூட்டைகளையும் பாதுகாப்பு முகக்கவசங்களையும் அளித்து முன்மாதிரியான வளைகாப்பு நிகழ்வாக கொண்டாடினார்.
இது குறித்து கர்ப்பிணி நிவேதா கூறுகையில்," நமக்காக தூய்மைப் பணி செய்யும் பணியாளர்களை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் வேண்டும் என்று முடிவெடுத்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளோம். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
மேலும் நிவேதா கணவர் பாலகுமார் கூறுகையில், “வளைகாப்பு நிகழ்ச்சியை விமரிசையாக நடத்த முடிவெடுத்து இருந்தோம். ஆனால் தற்போது அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க விரும்பி தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு உணவு பொருள் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி
!