சேலம்: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் இந்தியாவிலிருந்து 303 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். அக்டோபர் 28 ஆம் தேதிவரை 17 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்திய அணி தற்போது வரை தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் உயரம் தாண்டுதல் போட்டியில், சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இந்தியாவிற்கு மீண்டும் ஒருமுறை பெருமை தேடித் தந்துள்ளார். உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்துள்ளார். இது குறித்து மாரியப்பனின் தாயார் சரோஜா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “பல சோதனைளைக் கடந்து எனது மகன் இந்த வெற்றியை அடைந்துள்ளார். தங்கப்பதக்கம் பெறுவார் என்று எதிர்பார்த்தோம்.
இதையும் படிங்க: ஆசிய பாரா விளையாட்டு : தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி வென்று சாதனை! இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தல்!
ஆனால் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. இனிவரும் போட்டிகளில், சிறப்பாக விளையாடி, தங்கம் வென்று இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையைத் தேடித் தருவார்” என்று தெரிவித்தார். மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசிய பாரா விளையாட்டு : சாதனைகளை வாரிக்குவிக்கும் இந்திய வீரர் சுமித் அண்டில்!