ETV Bharat / state

சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு.. ஏற்பாடுகள் தீவிரம்! - பெத்தநாயக்கன்பாளையம்

DMK Youth Conference: சேலம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஒன்பது லட்சம் சதுர அடி பரப்பளவில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

சேலம் திமுக இளைஞரணி மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 3:14 PM IST

சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை மறுநாள் (ஜன.21) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடக்கும் மாநாடு என்பதால், இம்மாநாட்டுக்கு திமுகவினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு அங்குப் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, ஒன்பது லட்சம் சதுர அடி பரப்பளவில் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

மாநாட்டின் நுழைவு வாயில் பகுதியில் பிரம்மாண்ட முறையில் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவங்கள் பொறிக்கப்பட்ட கோட்டை வடிவில் மாநாட்டின் முகப்பு காட்சியளிக்கிறது. இந்த மாநாட்டிற்குத் தமிழக முழுவதிலும் இருந்து திமுக இளைஞர் அணியினர் கலந்து கொள்ளும் வகையில் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

அதனால், இந்த இளைஞர் அணி மாநில மாநாட்டில் தமிழக முழுவதும் இருந்து 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மாநாட்டுத் திடலில் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டை ஒட்டி ஓமலூர் விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் திடல் வரைக்கும் 20 அடி தூரத்திற்கு ஒரு கம்பம் அமைக்கப்பட்டு அதில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வழிநெடுகிலும் கட்சிக் கொடிகள் இருபுறமும் கட்டப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாநாட்டு வரவேற்பு பேனர்களும், அலங்கார வளைவு தோரணங்களும் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சேலம் மாவட்டம் களைகட்டி உள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு கொடியேற்று நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கட்சிக் கொடியேற்றுவதற்காக 100 அடி உயரத்தில் பிரம்மாண்ட கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் வரவேற்றுப் பேசுகிறார். இதையடுத்து பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள் பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 6:30 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் பிறகு இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார்.

தொடர்ந்து பொருளாளர் டி.ஆர் பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் பேசுகிறார்கள். முடிவில் இரவு 7:30 மணியளவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் மாநாட்டு நிறைவு சிறப்புரை ஆற்றுகிறார். முடிவில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு நன்றி கூறுகிறார்.

மாநாட்டில் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையிலும் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் மாநாட்டு மலர் வெளியீடு, 10 பாசறை நூல்கள் வெளியீடு, திமுக முன்னோடிகளுக்கு மரியாதை, நீட் தேர்வு விலக்கு நம் இலக்கு, அஞ்சல் அட்டை ஒப்படைப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் நாளை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு மாலை 5 மணிக்கு வருகிறார். அங்கு அவருக்கு அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கத் தயாராகி வருகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞரணி மாநாடு; படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.