ETV Bharat / state

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சேலம் ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்! - salem

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் உயிரிழந்த சேலம் ராணுவ வீரரின் உடல், இன்று அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேலம் ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்!

author img

By

Published : Apr 14, 2023, 10:48 PM IST

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் உயிரிழந்த சேலம் ராணுவ வீரரின் உடல், இன்று அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம்

சேலம்: பஞ்சாப் மாநிலம், பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்றைய முன்தினம் (ஏப்ரல் 12) காலை திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இதில், தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காடு கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்த வீரர்களுக்கு நேற்று (ஏப்ரல் 13) பிரேதப் பரிசோதனை நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள், நேற்று மாலை சொந்த ஊர்களுக்கு கொண்டு வரப்பட்டது. இவர்களில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஷ் உடல், பஞ்சாபில் இருந்து விமானம் மூலமாக கோயம்புத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு ராணுவ அதிகாரிகள் சார்பில், கமலேஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கு இருந்து அவரது சொந்த ஊரான சேலம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி பனங்காடு கிராமத்திற்கு கமலேஷின் உடல் எடுத்து வரப்பட்டது.

அப்போது உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கூறி, உடல் எடுத்து வரப்பட்ட ஆம்புலன்ஸ் முன்பாக மேச்சேரி, வனவாசி பிரதான சாலையில் கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே காவல் துறையினரிடம், கிராம இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சாதாரண ஆம்புலன்ஸில் எடுத்து வந்த நிலையில், நான்கு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, ராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டு, அந்த வாகனத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ் உடலை வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது அவரது உடல் கொண்டு வரப்பட்ட சாலை எங்கும் மலர்கள் தூவி, வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட ராணுவ வீரரின் உடலைப் பார்த்து பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதனையடுத்து உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷ் உடலுக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இடுகாட்டில், இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்படடது. மேலும், பனங்காடு கிராமத்தில் ராணுவ வீரர் கமலேஷ் உயிரிழப்பை அனுசரிக்கும் விதமாக, பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: பதிண்டா துப்பாக்கிச்சூட்டில் சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் கமலேஷ் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.