சேலம் சத்திரம் பகுதியில் அருகே அரிசிப்பாளையம் தெப்பக்குளம் அமைந்துள்ளது. அக்டோபர் 19 இரவு சேலம் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் நீர் நிலைகள் ஆங்காங்கே நிரம்பியுள்ளது.
இந்த மழை காரணமாக இந்த குளம் நிரம்பியது. தூர் வாரப்பட்டுள்ள இந்த குளம் உரிய தடுப்பு முறைகளோடு பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.
மேலும் இதன் அருகே அமைந்துள்ள மாவட்ட நூலகம் உபரி நீர் காரணமாக நீரில் மூழ்கியது. சேலம் ஏற்காடு பகுதியோடு இணைந்திருக்கும் ஓடை பகுதியால் இந்த குளமானது அவ்வப்போது நிரம்பி நூலகத்தினுள் சென்று விடுகிறது.
நூலகம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நீர் சூழ்ந்து இருப்பதால் இந்த இடம் தற்போது புது மாற்றிடத்திற்கு செல்லவிருக்கிறது. நீர் நிரம்பி தெப்பக்குளம் காட்சியளிப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை காரணமாக நிரம்பிய அரிசிபாளையம் தெப்பக்குளம் - அரிசிபாளையம் தெப்பக்குளம்
சேலம்: மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அரிசிபாளையம் தெப்பக்குளம் முழுவதுமாக நிரம்பியது.
![கனமழை காரணமாக நிரம்பிய அரிசிபாளையம் தெப்பக்குளம் அரிசிபாளையம் தெப்பகுளம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10:23:52:1603212832-tn-slm-02-arisilapalayam-library-drowned-photo-script-tn10031-20102020130050-2010f-00888-944.jpg?imwidth=3840)