சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் பகுதியில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் மொத்த விற்பனை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள 250க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக அம்பாயிரம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் டாஸ்மாக் அலுவலகத்தில் தீபாவளி மாமூல் வசூலிப்பதாக சேலம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி தலைமையிலான காவல் துறையினர் நேற்று (நவ.13) மாலை 5 மணி முதல் டாஸ்மாக் குடோனுக்கு சென்று சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 21 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டாஸ்மாக் அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவரிடம் விசாரணை!