இந்தியா முழுவதும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசை தடுக்கும்விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில் சேலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், வன உயிரியல் பூங்கா, ஏற்காடு உள்ளிட்ட முக்கியச் சுற்றுலாத் தலங்கள் என மக்கள் கூடும் அனைத்து பொழுதுபோக்கு தலங்களும் தற்காலிமாக மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் தேவை இல்லாமல் கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துபாயிலிருந்து சென்னை வந்த 8 பேருக்கு கொரோனா அறிகுறி!