இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் வனிதா கூறுகையில்வ்,"கரோனோ நோய்த்தொற்று பரவாமல் இருக்க அரசு விதித்துள்ள தடை உத்தரவால் அழகுக்கலை, அலங்கார தொழில் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழகு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தடை த்தரவு நீடிப்பதால் கடுமையான பொருளாதார இழப்பை நாங்கள் சந்தித்திருக்கிறோம்.
எனவே, தமிழ்நாடு அரசு தடை உத்தரவில் சில தளர்வுகளை அளித்து நாங்கள் தொழில் நடத்த வழிவகை செய்திட உடனடியாக உதவிட வேண்டும் .
இது தொடர்பாக, அனைத்து மாவட்டங்களிலும் அழகுக்கலை நிபுணர்கள் சங்கம் சார்பில் மனு அளித்து இருக்கிறோம்.
அதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியரிடமும் எங்களது கோரிக்கையை மனுவாக அளித்திருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஏழை தொழிலாளர்களை சுரண்டும் பாஜக அரசு - ஸ்டாலின் காட்டம்