ETV Bharat / state

'மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல்' - எஸ்.கே. தியாகராஜன் அறிவிப்பு

சேலம்: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக சிஐடியு மாநிலத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

எஸ்.கே. தியாகராஜன் அறிவிப்பு
எஸ்.கே. தியாகராஜன் அறிவிப்பு
author img

By

Published : Jan 6, 2020, 7:29 PM IST

சேலத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு மாநிலத் தலைவர் எஸ்.கே. தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,"விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஜனவரி எட்டாம் தேதி, பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், '' பொது வேலைநிறுத்தம் நடைபெறும் அன்று சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகிலும், ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியல் போராட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொள்ளப்போவதாகவும் '' அவர் கூறினார்.

எஸ்.கே. தியாகராஜன் அறிவிப்பு

தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஜனவரி எட்டாம் தேதி நண்பகல் 12 மணிக்கு 10 நிமிடங்கள் நிறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் சிஐடியு மாநித்தலைவர் எஸ்.கே. தியாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டம்

Intro:வரும் எட்டாம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தை ஒட்டி சேலத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மூன்று இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்று சிஐடியூ மாநிலத் தலைவர் எஸ் கே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Body:இதுதொடர்பாக இன்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்கே தியாகராஜன் கூறுகையில் ," ஜனவரி எட்டாம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது .

இதில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன . விலைவாசி உயர்வு கட்டுப்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்களிடமும் பொதுமக்களிடமும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து செல்லும் வகையில் பல்வேறு கட்ட பிரச்சார இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் அடுத்த கட்டமாக நாடு முழுவதும் எட்டாம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத் துள்ளன . இந்த பொது வேலை நிறுத்தம் மூலம் மத்திய அரசுக்கு தொழிலாளர் இயக்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை கவனப்படுத்தி உள்ளது.

Conclusion:பொது வேலைநிறுத்தம் நடைபெறும் அன்று சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகிலும் ஆத்தூர் மேட்டூர் உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியல் போராட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கைதாக தயாராக இருக்கிறார்கள் .

சேலம் மாவட்டம் முழுவதும் ஆட்டோக்கள் ஓடாது. அரசுப் பேருந்துகளில் 60 விழுக்காடு அளவிற்கு நிறுத்தப்பட உள்ளது .

எனவே பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை எட்டாம் தேதி நண்பகல் 10 நிமிடம் நிறுத்தி போராட்டத்திற்கு ஆதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.