ETV Bharat / state

'நீட் தேர்வில் விலக்கு; மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்'

சேலம்: நீட் தேர்வில் விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என நடிகர் கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகர் கருணாஸ்
author img

By

Published : Jun 6, 2019, 5:07 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து தற்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் வாக்கு சேகரித்துவருகின்றனர். அதன்படி சேலத்தில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்து நடிகர் கருணாஸ் தலைமையிலான குழுவினர் வாக்குச் சேகரித்தனர். அப்போது நடிகர் கருணாஸ் பேசுகையில், சென்ற தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டிற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதேபோல் இந்தாண்டும் எங்களது அணி வெற்றிபெற்றால், சேலம் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு இலவச வீட்டு மனை, திண்டுக்கல்லில் உள்ள தனது சொந்த நிலத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நலிவடைந்த நாடக நடிகர்கள் இறுதிக் காலத்தை அமைதியாக செலவழிக்க முதியோர் இல்லம் ஆகியவை அமைக்கப்படும் உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நீட் தேர்வு உள்ளிட்ட மாநிலம் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பேன்.

நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்

நீட் தேர்வு தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மாணவி அனிதா நீட் தேர்வால் உயிரிழந்தார். அண்மையில் கூட சில மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுபோன்ற உயிரிழப்புகள் இனி தமிழ்நாட்டில் நடக்கக் கூடாது . அதற்காக நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்" என்றார்.

Intro:நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதி விலக்கு வேண்டும் என்றும் மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

Body:தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது .

இதனையொட்டி மாவட்டம் தோறும் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களை, தற்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதன்படி இன்று சேலத்தில் உள்ள நாடக நடிகர்களை, சேலம் நாடக நடிகர் சங்க அலுவலகத்தில், நேரில் சந்தித்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் நடிகர் கருணாஸ் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர்கள் மத்தியில் பேசிய நடிகர் கருணாஸ் சென்ற தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டிற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் , சேலம் நாடக நடிகர் சங்கத்தின் நலிவடைந்த கலைஞர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திண்டுக்கல்லில் உள்ள தனது சொந்த நிலத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் நலிவடைந்த நாடக நடிகர்கள் இறுதிக் காலத்தை அமைதியாக செலவழிக்க முதியோர் இல்லம் அமைக்கப்படும் எனவும் கருணாஸ் கூறினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது கருணாஸ் கூறுகையில்," நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நீட் தேர்வு உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பேன்.

நீட் தேர்வு தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மாணவி அனிதா நீட் தேர்வால் உயிரிழந்தார். அண்மையில் கூட சில மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதுபோன்ற உயிரிழப்புகள் இனி தமிழகத்தில் நடக்கக் கூடாது . அதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு, தமிழக மாணவ மாணவியர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

நடிகர் சங்கத்திற்காக கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தை கட்டி முடித்து நடிகர் சங்க உறுப்பினர்களிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்று சென்ற தேர்தலின்போது தெரிவித்திருந்தோம்.

அதை நோக்கியே எங்கள் செயல்பாடு சென்று கொண்டிருக்கிறது. நிச்சயமாக மனசாட்சி உள்ளவர்கள் மீண்டும் பாண்டவர் அணிக்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள்.

இந்த முறை கண்டிப்பாகத் தேர்தலில் வெற்றிபெறுவோம். நாங்கள் நன்றி மறவாதவர்கள் .

மனசாட்சி உள்ளவர்கள் உறுதியாக எங்களுக்கு வாக்களிப்பார்கள் . நடிகர் சங்க உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்துவோம் " என்று தெரிவித்தார்.

Conclusion:இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சேலம் நாடக நடிகர் சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் நடிகர் கருணாஸூடன் இருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.