ETV Bharat / state

’டெம்டெசிவிர் மருந்து வாங்க வற்புறுத்தும் மருத்துவமனை மீது நடவடிக்கை’ - அமைச்சர் எச்சரிக்கை! - latest salem district news

கரோனா தொற்றாளர்களின் உறவினர்களை ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வர வற்புறுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீது, உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

action-against-hospital-forcing-people-to-buy-remdesivir-minister-warns
டெம்டெசிவிர் மருந்து வாங்க வற்புறுத்தும் மருத்துவமனை மீது நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை
author img

By

Published : May 19, 2021, 5:51 PM IST

சேலம்: இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மே.19) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா தொற்றை ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சேலம், இரும்பாலை வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. நாளை (மே.20) இதனை முதலமைச்சர் நேரில் பார்வையிடவுள்ளார். அவரை வரவேற்க கட்சியினர், பொதுமக்கள் என யாரும் வரவேண்டாம். இது தொற்று காலம் என்பதால் வரவேற்பு எதுவும் வழங்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

’டெம்டெசிவிர் மருந்து வாங்க வற்புறுத்தும் மருத்துவமனை மீது நடவடிக்கை’ - அமைச்சர் எச்சரிக்கை!

சேலத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைகள், தங்களது படுக்கை வசதிகளைவிட கூடுதலான நோயாளிகளை சிகிச்சைப் பெற அனுமதித்துள்ளன. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் நோயாளிகள் எந்த பாதிப்பும் அடையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளின் உறவினர்களை ரெம்டெசிவிர் மருந்து வாங்கிவர வற்புறுத்தினால், அவர்கள் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ். கார்மேகம், சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்!' - முதலமைச்சர் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.