ETV Bharat / state

மழை நீருடன் அடித்து வரப்பட்ட 7 அடி நீள மலைப்பாம்பு!

author img

By

Published : Aug 14, 2019, 11:14 PM IST

சேலம்: ஏற்காடு அருகே ஓடையில் அடித்து வரப்பட்ட ஏழு அடி நீள மலைப்பாம்பை, வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சேலம்

சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் ஓரிரு நாட்களாக மழைபெய்து வருவதால் அங்குள்ள ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இந்நிலையில், இன்று காலை ஏற்காடு மலையில் இருந்து காரைக்காடு வழியாக செல்லக்கூடிய ஓடை ஒன்றில் ஏழு அடி நீள மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட காரைக்காடு ஊர் மக்கள் அச்சமடைந்து அஸ்தம்பட்டி வனசரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஏழு அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்

பின்னர் அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் பரசு ராமமூர்த்தி, மோகன், வனக்காப்பாளர் மாதையன் ஆகியோர், மலைப்பாம்பை கைப்பற்றி ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் விட்டனர்.

Intro:சேலம் அருகே ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது. மழை நீரில் அடித்து வந்த மலைப்பாம்பு வனத்துறையினர் பிடித்தனர்.

Body:சேலம் அருகே மலை பெய்த பொழுது ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு தண்ணீரில் அடித்து வந்தது. இதை வனத்துறையினர் பிடித்தனர்.

சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் போது சேலம் அருகே உள்ள கரை காடு என்ற பகுதியில் வியாழன் காலை ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு மழை நீரில் அடித்து வந்தது.

இதனை வனக்குழு தலைவர் மாணிக்கம் பார்த்து உடனே சேலம் மாவட்ட வன அதிகாரி பெரியசாமிக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து கரை காடு பகுதிக்கு சென்ற வனசரகர் பரசு ராமமூர்த்தி மற்றும் வனவர் மோகன், வனக்காப்பாளர் மாதையன் உள்ளிட்டோர் சென்றனர். பின்னர் அந்த ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு பாம்பு பிடிக்கும் ஊழியர் லாரா பிடித்துக் கொண்டார்.

பிறகு இந்த மலைப் பாம்பு சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் இந்த மலைப்பாம்பு கூண்டில் விடப்பட்டது. இந்த மலைப்பாம்பு ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குருவம்பட்டி வன ஊழியர் பூங்காவில் விடப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் பொழுது தற்பொழுது ஏற்காடு மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால் மழை நீரில் இந்த மலைப்பாம்பு அடித்து வந்திருக்கலாம். இதைப் பார்த்து பொதுமக்கள் அச்சப்பட்டனர் பின்னர் பாம்பு பிடிக்கப்பட்டது. என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.