இது குறித்து, சேலம் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகத்தின் ஆணையர் ஏ.எஸ். மீனலோச்சனி நேற்று (பிப். 5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்புத் தடுப்பு நடவடிக்கைகளின்பேரில் சேலம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகத்திற்குள்பட்ட பதிவுபெற்ற வரி செலுத்தும் ஒருவர் ரூ.7.75 கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூலித்து, அரசுக் கணக்கில் செலுத்தாமல் இருந்ததால் கடந்த 3ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகத்தின் தொடர்ச்சியான நினைவூட்டல்கள், அறிவுரைகள் வழங்கப்பட்டும், அந்த வரி ஏய்ப்பாளர் தான் வசூல்செய்த சரக்கு மற்றும் சேவை வரித் தொகையை அரசுக் கணக்கில் செலுத்தவில்லை. மாறாக அவர் தனது வேறு வகை செலவினங்களுக்குப் பயன்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அந்நபர் கைதுசெய்யப்பட்டு, சேலம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். வசூல்செய்த சரக்கு மற்றும் சேவை வரித் தொகையை மூன்று மாதங்களுக்கு மேலாக வரி செலுத்துபவர் தன்வசம் வைத்துக்கொள்ளக் கூடாது. மேலும் இவ்வகை விதிமீறல்கள் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017 பிரிவு 132இன்படி தண்டனைக்குரியதாகும்.
இதன்மூலம் வணிகர்கள், வரி செலுத்துபவர்கள் தாங்கள் வசூலித்த சரக்கு மற்றும் சேவை வரித் தொகையினை உரிய நேரத்திற்குள் அரசுக்குச் செலுத்தவும், காலமுறைப் படிவங்களை உரிய நேரத்திற்குள் தாக்கல்செய்யவும், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்திற்குரிய கட்டாயமான பொறுப்புகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கூட்டுறவுக் கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?