ETV Bharat / state

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5,761 கிலோ தங்கம் வழங்கியுள்ளோம் - முதலமைச்சர் - தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5761 கிலோ தங்கம் வழங்கியுள்ளோம் முதலமைச்சர் பழனிசாமி

சேலம்: தமிழ்நாட்டில் இதுவரை தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1500 கோடி மதிப்பில் ஐந்தாயிரத்து 761 கிலோ தங்கம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

cm edapadi palanisamy
author img

By

Published : Sep 30, 2019, 8:08 AM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமண நிதி உதவியுடன் தாலிக்குத் தங்கம், அங்கன்வாடி பணியாளர்களுக்கு அலைபேசி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமூகநலத் துறை, சேலம் மாநகராட்சி, பள்ளிக் கல்வித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளத் துறை சார்பில் ரூ.30.62 கோடி மதிப்பிலான 17 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதேபோல 10 ஆயிரத்து 130 பயனாளிகளுக்கு ரூ.47.83 கோடி வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.8.9 கோடியில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் 2011ஆம் ஆண்டு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. அப்போது நான்கு கிராம் தங்கம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு முதல் எட்டு கிராம் தங்கமாக உயர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1500 கோடி மதிப்பில் ஐந்தாயிரத்து 266 கிலோ தாலிக்குத் தங்கம், ரூ.3956 கோடி மதிப்பில் திருமண நிதி உதவியும் என சுமார் ரூ.11.45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. நடப்பாண்டில் ரூ.744 கோடி நிதி ஒதுக்கீடும் தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கும் திருமண நிதி உதவித் திட்டமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் 500 படுக்கை வசதி கொண்ட மகப்பேறு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் கொண்ட பச்சிளங்குழந்தைகள் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகக் கடன் வழங்கிய அரசு தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.

சேலத்தில் நிகழாண்டில் ஆறாயிரம் பயனாளிகளுக்கு ரூ.18.73 கோடியில் தாலிக்கு தங்கமும் ரூ.23.4 கோடி நிதி உதவியும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் வீடு இல்லாதவர்கள் நிலையை மாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

இந்த விழாவில் சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா, சமூக நலத் துறை செயலர் மதுமதி, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க: ஸ்டாலின் அதிமுகவை குறைகூறுவதையே தொழிலா வச்சுருக்காரு!

Intro:தமிழகத்தில் இதுவரை தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ரூ. 1500 கோடி மதிப்பில் 5761 கிலோ தங்கம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் தெரிவித்தார்.

Body:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திருமண நிதி உதவி யுடன் கூடிய தாலிக்கு தங்கம், அங்கன்வாடி பணியாளர்களுக்கு அலைபேசி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி சமூகநலத்துறை, சேலம் மாநகராட்சி, பள்ளிக்கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை , பால்வளத் துறை சார்பில் ரூ 30.62 கோடி மதிப்பிலான 17 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதேபோல 10,130 பயனாளிகளுக்கு ரூ. 47. 83 கோடியும் , ரூ. 8.9 கோடியில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளையும் முதலமைச்சர் வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்," மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2011ம் ஆண்டு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அப்போது 4 கிராம் தங்கம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு முதல் 8 கிராம் தங்கமாக உயர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 1500 கோடி மதிப்பில் 5266 கிலோ தாலிக்குத் தங்கம், ரூ3,9 56 கோடி மதிப்பில் திருமண நிதி உதவியும் என சுமார் 11.45 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 744 கோடி நிதி ஒதுக்கீடு தாலிக்கு தங்கம் திட்டத்திற்கும் திருமண நிதி உதவித் திட்டமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் 500 படுக்கை வசதி கொண்ட மகப்பேறு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் கொண்ட பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக கடன் வழங்கிய அரசு தமிழக அரசு . தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.

சேலத்தில் நிகழாண்டில் 6000 பயனாளிகளுக்கு ரூ. 18.7 3 கோடியில் தாலிக்கு தங்கமும், ரூ. 23.4 கோடி நிதி உதவியும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

அதேபோல தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் நிலையை மாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

Conclusion:இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா , சமூக நலத்துறை செயலர் மதுமதி, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.