ETV Bharat / state

சேலத்தில் ரூ.37 கோடி மதிப்புடைய தங்க ஆபரணங்கள் பறிமுதல்! - ரூ.37 கோடி மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 37 கோடியே 57 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

37 crore worth gold jewels seized in salem
ரூ.37 கோடி மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல்
author img

By

Published : Mar 13, 2021, 12:08 PM IST

சேலம்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே பெரியேரி என்ற இடத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி விசாரணை செய்ததில், தனியார் நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக மொத்தமாக தங்க ஆபரணங்களை கொண்டு செல்வது கண்டறியப்பட்டது.

இந்த தங்க ஆபரணங்கள் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு பொதுமையத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் வாகனத்தில் இருந்த ரூபாய் 37 கோடியே 57 லட்சம் மதிப்பிலான 237.344 கிலோ தங்க ஆபரணங்களை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வாகன ஓட்டுநர் ஊழியர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலையில் கணக்கெடுக்கப்பட்டு, பின்னர் கெங்கவல்லி சார் கருவூலத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க:பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை குறைவாகக் காட்டுகின்றனரா பறக்கும் படையினர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.