சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் அடிவாரப் பகுதியில் அடையாளம் தெரியாத இரு ஆண் சடலங்கள் மிதப்பதாக மேட்டூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், இரு உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் சட்டைப்பையில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு கேட்டபோது, அஸாம் மாநிலத்திலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதில் பேசியதாகவும், இறந்தவர் குறித்த விவரம் தெரியவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இறந்தவர்கள் யார், தற்கொலை செய்து கொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கஞ்சா விற்பதில் தகராறு - இளைஞரை வெட்டிய 4 பேர் கைது