சேலம் மாவட்டம், வேம்படிதாளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இதேப் பள்ளியில் உதவி தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இவர் கடந்தாண்டு இந்தப் பள்ளியில் படித்த பன்னிரெண்டாம் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதில் அந்த மாணவி கர்ப்பமானர். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை தேடி வந்தனர். இந்நிலையில் சேலம் பகுதியில் போதையில் சுற்றித் திரிந்த அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து பாலியல் புகாருக்கு உள்ளான பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ள பாலாஜிக்கு திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.