சேலம்: கள் ஒரு போதைப் பொருள் என்று யார் நிரூபித்தாலும் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு என்றும் அறிவித்து அதனை விளம்பரப்படுத்தும்விதமாக இன்று காலண்டர்களை அறிமுகம் செய்தார்.
கள் இறக்கும் அறவழிப் போராட்டம்
அதனைத் தொடர்ந்துச் செய்தியாளரைச் சந்தித்த அவர், ”கடந்த 17 ஆண்டுகளாக கள்ளை அனுமதிக்க வேண்டும் என்று பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதற்கு இதுவரை வந்த எந்த அரசும் செவிசாய்க்காத நிலையில், இறுதிப் போராட்டமாகக் கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்தை வருகின்ற 21ஆம் தேதிமுதல் தமிழ்நாடு முழுவதும் நடத்தி அரசுக்கு நெருக்கடித் தர உள்ளோம்.
மேலும் தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி தராவிட்டால், வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வாக்குகளை மாற்றி அளிக்க வாய்ப்புள்ளது. நடத்த இருக்கும் இந்த அறவழிப் போராட்டத்தில் 10 லட்ச பனை விவசாய குடும்பங்களும், 50 லட்சம் விவசாய குடும்பங்களும் பங்கேற்க உள்ளன.
எட்டு கோடி மக்கள் நுகர்வோராக உள்ளதால் வாக்குகளை மாற்றிச் செலுத்த வாய்ப்பு உள்ளது என்பதை அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:இனிஷியல் இனி தமிழில்தான் இருக்க வேண்டும் - அரசாணை வெளியீடு