ராணிப்பேட்டை மாவட்டம் கொளத்தேரி கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் அருண்(12), கிஷோர்(10). இவர்கள் இருவரும் ஒழுங்கு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழு, ஐந்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த இவர்கள் நேற்று (ஏப்ரல். 23) ஒழுகுர் பகுதியில் உள்ள குட்டையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இருவரின் உடல்களையும் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து,வாலாஜா பேட்டை காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாட்ஸ் அப் உதவியால் 4 வயது சிறுவன் மீட்பு