ETV Bharat / state

நாட்டுத் துப்பாக்கியுடன் காரில் சென்ற இருவர்: விரட்டிப் பிடித்த போலீஸ்!

author img

By

Published : May 27, 2020, 11:29 PM IST

ரானிப்பேட்டை: ஆற்காடு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை வாங்கி அங்கிருந்து காரில் அதிவேகமாக சென்றவர்களை காவல் துறையினர் விரட்டிப்பிடித்து கைதுசெய்தனர்.

நாட்டுத் துப்பாகியுடன் காரில் சென்ற இருவர்: விரட்டிப் பிடித்த போலீஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலூர் மாவட்டத்திலிருந்து சிலர் சட்ட விரோதமாக கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு (OCIU) காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையிலான காவல் துறையினர் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆற்காடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சாலையின் ஓரமாக ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. அந்த காரில் உள்ள நபர்களின் நடவடிக்கைகளை காவல் துறையினர் கண்காணித்துக்கொண்டிருந்தபோது திடீரென அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காரில் இருந்தவர்களிடம் ஒரு பார்சலை கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றனர்.

கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால், அதிர்ந்துபோன காவல் துறையினர் அங்கிருந்து சென்ற காரை துரத்திச் சென்றனர். அதிவேகமாக சென்ற அந்த காரை வி.சி.மோட்டூர் பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர், காரில் இருந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இருவரும் ஸ்ரீபெரும்பத்தூர் அருகே உள்ள செங்காடு பகுதியைச் சேர்ந்த ராமு (25) பூரணச்சந்திரன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களது காரில் இருந்த பார்சலை ஆய்வுசெய்த காவல் துறையினர், அதில் 9mm நாட்டுத் துப்பாக்கி இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த துப்பாக்கி, 3 ராவுன் புல்லட், அவர்கள் பயன்படுத்திய கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மூன்று பேர்
கைதுசெய்யப்பட்ட மூன்று பேர்

தொடர்ந்த அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் தேவா என்பவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கியை வாங்கி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, துப்பாக்கி விற்ற தேவா, அதனை வாங்கிய ராமு, பூரணச்சந்திரன் ஆகிய மூவரையும் கைது செய்த வாலாஜா பேட்டை காவல் துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: என்கவுன்ட்டர் வீடியோ வெளியிட்ட சட்டீஸ்கர் நக்சலைட்டுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.