ETV Bharat / state

எம்எல்ஏ நிதியை சொந்த நிதியாக சித்தரித்த திமுக பொருளாளர்! - அரசினர் மேல்நிலைப் பள்ளி

சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட அரசினர் மேல்நிலைப் பள்ளி நுழைவாயிலை தன் சொந்த நிதியிலிருந்து கட்டப்பட்டது போல திமுக பொருளாளர் துரைமுருகன் சித்தரித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

DMK treasurer
DMK treasurer
author img

By

Published : Oct 8, 2020, 9:55 PM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நுழைவு வாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்த நுழைவு வாயிலின் திறப்பு விழா நிகழ்ச்சி, நாளை (அக். 09) நடைபெறவுள்ளது. இதற்காக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

அரசு முத்திரை பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டில் திமுகவினரின் பெயர்களும், அவர்களது கட்சி பொறுப்பும் பொறிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், நுழைவு வாயிலில் "சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது" என்று குறிப்பிடப்படாமல் 'நிதி உதவி மாண்புமிகு துரைமுருகன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு நிதியிலிருந்து நுழைவாயில் கட்டிவிட்டு, அதனை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து கட்டியது போல் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சித்தரித்திருப்பதைக் கண்டித்து, அப்பகுதி மக்களும், அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வேலூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்திடம் விளக்கம் கேட்டபோது, அரசினர் மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட நுழைவுவாயில், சுற்றுச்சுவர் ஆகியவை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் துரைமுருகனின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டது.

இதற்கு கல்வெட்டு வைக்கும் போது சட்டப்பேரவை உறுப்பினரின் பெயருடன் வைப்பது எல்லோரும் செய்வது தான் இதில் என்ன தவறு உள்ளது. இதுபோன்று அதிமுக உறுப்பினர்களின் தெகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட பல கட்டடங்கள் அவர்களது பெயருடன் இன்று வரை பராமரிக்கப்படுகிறது. அதிமுகவினர் மக்களுக்கு எந்த உதவியும் செய்தது இல்லை. திமுக எதிர்கட்சியாக இருந்து கொண்டு இதுபோன்ற உதவி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் பொறாமைப்படுகின்றனர் என்றார்.

இதையும் படிங்க : பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் கலந்துகொண்ட பாஜக எம்.ஏல்.ஏக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.