தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, தேர்தல் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டம் விளாம்பாக்கம் அருகே தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
![ரூ.1.69 லட்சம் பணம் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rpt-01-1lakh69thousand-money-confiscated-script-image-7209364_04032021192249_0403f_1614865969_833.jpg)
அப்போது ஆரணியில் இருந்து வந்து காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.69 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த தேர்தல் அலுவலர்கள் ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி அனுமதியுடன் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
![ரூ.1.69 லட்சம் பணம் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rpt-01-1lakh69thousand-money-confiscated-script-image-7209364_04032021192249_0403f_1614865969_757.jpg)
இதையும் படிங்க: ஆட்டையாம்பட்டியில் ரூ.7.57 லட்சம் பறிமுதல்!