ETV Bharat / state

‘பயிர் உயிர் இல்லையா..’ டிராக்டர் ஏற்றி பயிர்களை அழித்த வருவாய்த் துறையினர்!

author img

By

Published : Feb 25, 2023, 7:32 AM IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மருதாலத்தில் புறம்போக்கு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் டிராக்டர் ஏற்றி அழித்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘பயிர் உயிர் இல்லையா..’ டிராக்டர் ஏற்றி பயிர்களை அழித்த வருவாய்த்துறையினர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மருதாலத்தில் புறம்போக்கு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பச்சிளம் நெற்பயிர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் டிராக்டர் மூலம் அழித்தனர்

ராணிப்பேட்டை: சோளிங்கரை அடுத்த ஒழுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவர், அந்த கிராமத்தில் உள்ள 5 சென்ட் புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார். அதேநேரம் அதற்கான நில வரியையும் அவர் முறையாக செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது அந்த நிலத்தில் நெல் நாற்று நட்டு, நீண்ட நாட்களாக பராமரித்து வந்துள்ளார். இதன் காரணமாக பயிர்கள் அனைத்தும் பச்சைக்கட்டி, பால்கதிர் விட்டு தொண்டைப் பயிர்களாக இருந்தது. இந்த நிலையில் நேற்று (பிப்.24) அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், நாகராஜனிடம் நெல் பயிரிட்டுள்ள புறம்போக்கு நிலத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு குடியிருப்பு அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் உடனடியாக நிலத்தை எடுத்துக் கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது விவசாயி நாகராஜன், அறுவடையை முடித்ததும் நிலத்தை ஒப்படைப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதனை கருத்தில் கொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள், நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பச்சிளம் பயிர்களை டிராக்டர் மூலம் நாகராஜனின் கண் முன்னே அழித்தனர்.

கண்ணீர் ததும்ப வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துக் கொண்டே இருந்தார், அந்த விவசாயி. இதனிடையே அதிகாரிகளின் இந்த செயலைக் கண்ட அப்பகுதி விவசாயிகள், பிள்ளைகளை போல பயிர்களை பாதுகாத்து வரும் எங்கள் கண் முன்னே அதிகாரிகள், பச்சிளம் நெற்பயிர்களை அழித்தது எங்களுடைய வாழ்வாதாரத்தையே அழித்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஓட்டு கேட்கும் அமைச்சரை சாலையில் நிற்க வைத்து கேள்வி கேட்போம்: சமூக ஆர்வலர் முகிலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.