ETV Bharat / state

ராணிப்பேட்டை தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..! - அரக்கோணம் செய்திகள்

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியை ஆண்ட நவாப் சாதத்துல்லாகான் தனக்கு கப்பம் கட்ட மறுத்த செஞ்சியின் மன்னர் ராஜா ஜெய்சிங் மீது, போர் தொடுத்தார். அதில் ஜெய்சிங் போராடி வீரமரணமடைந்தார். இத்துயர செய்தியைக் கேட்ட ஜெய்சிங்கின் மனைவியான ராணி பாய், கணவர் மீது வைத்திருந்த பேரன்பின் காரணமாக, உடன்கட்டை ஏறி தன் உயிரை நீத்தார். இருவரின் அந்நியோன்யத்தையும் கண்டு மெச்சிய ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான், பாலாற்றங்கரை ஓரத்தில் பளிங்கு கற்களால் ஆன இரு நினைவுச் சின்னங்களை எழுப்பினார். ராணி பாயின் காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 'ராணிப்பேட்டை' என்ற நகரையும் நிர்மாணித்தார், என்கிறது வரலாறு. ராணிப்பேட்டை மாவட்டத்தின் தெற்கே திருவண்ணாமலை மாவட்டமும், கிழக்கே காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டமும் மற்றும் வடக்கே ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

Ranipettai district watch tamilnadu assembly election 2021

author img

By

Published : Mar 4, 2021, 12:26 PM IST

Updated : Mar 4, 2021, 6:32 PM IST

வாசல்:

வேலூரில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு பிரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்திற்குப் பல வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. இந்த மாவட்டத்தில் ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, அரக்கோணம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

தொகுதிகள் வலம்:

ராணிப்பேட்டை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பெரிய ராணுவத்தளமாகத் திகழ்ந்தது, ராணிப்பேட்டை. அதற்கு கட்டியம் கூறுகின்றன இன்றும் பழமையான கட்டடங்களும் ஆங்கிலேயரின் கல்லறைகளும்.

இத்தொகுதியில் சிப்காட்டில் அமைந்துள்ள டிசிஎல் தொழிற்சாலையின் உள்ளே குரோமியம் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைகிறது. ஆனால், இதுவரை இதற்கு உரிய தீர்வு எட்டப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டைக்கு, தனியாக பேருந்து நிலையம் வேண்டும். கரோனா காலத்தில் இம்மாவட்டத்தில் பறிபோன இளைஞர்களின் வேலை வாய்ப்பினை மீண்டும் உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் மக்களால் பொதுவாக முன்வைக்கப்படுகின்றன.

சோளிங்கர்: அரக்கோணம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதி கடந்த 1957ஆம் ஆண்டு முதல் தேர்தல்களைச் சந்தித்து வருகிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில், தொகுதியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று. சோளிங்கர், நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிப்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் விசைத்தறிக் கூடங்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இங்குள்ள பல்வேறு தொழிற்சாலைகளால் இப்பகுதியினருக்கு வேலைவாய்ப்பு கணிசமாக உள்ளது. சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வண்ணமும் விபத்துகளைக் குறைக்கவும் மேம்பாலம் வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களால் வைக்கப்படுகிறது. காய்கறி அங்காடிகள் முறையான பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளதால், சோளிங்கரில் விற்பனைக்காக வரும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ராணிப்பேட்டை தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!

ஆற்காடு: 'ஆர்' எனப்படும் "ஆத்தி" மரங்களாலும், 'ஆல்' எனப்படும் "ஆலமரங்களாலும்" சூழ்ந்து காணப்பட்ட பகுதி இது என்பதால், வரலாற்றில் ஆற்காடு எனப்பெயர் பெற்றது. ராஜேந்திரசோழன் ஆட்சிக்காலத்தில் இவ்விடம் 'திருவழுந்தூர்' எனவும்; நவாப்கள் காலத்தில் "முகமதுபூர்" என்றும் அழைக்கப்பட்டது. பச்சைக்கல் மசூதியும் ஆற்காடு டெல்லி கேட்டும் இங்குள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்களாகும். ஆற்காட்டில் இருந்து ஆரணிக்குச் செல்லக்கூடிய சாலை மிகவும் நெருக்கடியாக உள்ளதால், அவ்வூரில் புறவழிச்சாலை ஒன்று அமைக்கப்பட வேண்டும். ஆற்காட்டில் 15 அடி அகலத்துடன்கூடிய மூன்று கால்வாய்களைத் தூர்வாரி, நகரத்தில் நீர் தேங்குவதைக் குறைக்கவேண்டும். ஆற்காட்டில் இருந்து ராணிப்பேட்டை செல்லும் வழியில் அடிக்கடி நிகழும் விபத்துகளைத் தடுக்க, அங்கு ஒரு பாலம் அமைக்கப்பட வேண்டும்.

அரக்கோணம்: திருத்தணி, திருப்பதி, திருவாலங்காடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சோளிங்கர் ஆகிய கோயில்களுக்குச் செல்லும் வழியில் மத்தியில் அமைந்துள்ளது, அரக்கோணம். முற்காலத்தில் 'அறுகோணம்' என்று அழைக்கப்பட்டு வந்த இவ்வூர், தற்போது மருவி நாளடைவில் அரக்கோணம் என்றானது. தமிழ்நாட்டிலேயே அதிக வெப்பம் பதிவாகும் இடமாக அரக்கோணம் இருந்து வருகிறது. இந்தியாவிலேயே முதலாவதாகவும் மிக நீளமான ஓடுதளம் கொண்ட கடற்படை விமானத் தளமுமான ஐ.என்.எஸ். ராஜாளி அரக்கோணத்தில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தெற்கு ரயில்வே தொடங்கப்பட்டு, ராயபுரத்திலிருந்து அரக்கோணம் வழியாக வாலாஜா ரயில் நிலையம் வரை, இருப்புப் பாதை அமைத்து, முதன்முதலாக ரயில் இயக்கப்பட்ட பெருமை இப்பகுதிக்கு மட்டுமே உண்டு என்பது கூடுதல் தகவல்.

அரக்கோணத்தைப் பொறுத்தவரையில் படித்தவர்கள் பெரும்பாலும் சென்னைக்கே பணிக்குச் செல்வதால், சொந்த ஊரிலேயே தொழிற்பேட்டையை எதிர்பார்க்கின்றனர். நிறைய எளிய மக்கள் படித்துப் பயன்பெறும் வகையில் ஒரு பல்தொழில் நுட்பக் கல்லூரி (Polytechnic College) அமைப்பதும்; சென்னைக்குச் சென்றுவர பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கைகளாகும்.

கள நிலவரம்:

ராணிப்பேட்டை தொகுதியில் 1991லிருந்து அதிமுக மூன்று முறையும் திமுக மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளன. ராணிப்பேட்டையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வண்ணம் முத்துக்கடையில் இருந்து பாரதி நகர் வரை பாலம் அமைப்பதற்கானப் பணிகள் தொடங்கியது; பூங்கா அமைக்கப் பணிகள் முடுக்கிவிடப்பட்டது போன்ற நல்ல திட்டங்களையும் இத்தொகுதியில் நிறைவேற்றி உள்ளார், தற்போதைய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். காந்தி.அதனால் இந்தமுறை இத்தொகுதியில் மீண்டும் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சோளிங்கர் தொகுதியில் 2016 தேர்தலிலும் 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஆளும் அதிமுகவே இங்கு வெற்றிவாகை சூடியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏவான ஜி.சம்பத் மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லையென்றாலும், சோளிங்கர் பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கப்படாதது, வரும் தேர்தலில் அதிமுகவுக்குச் சாதகமாக அமையாது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆற்காட்டுத் தொகுதியில் அதிமுகவின் கே.வி. ராமதாஸை தோற்கடித்து திமுக வேட்பாளர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் வெற்றிபெற்றுள்ளார். இவர் ஆற்காட்டிற்கு 1 கோடி ரூபாய் செலவில் மின்சார தகன மேடை அமைத்துக்கொடுத்தது, குடிநீர் தட்டுப்பாட்டைப்போக்க நடவடிக்கை எடுத்தது வரும் தேர்தலிலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதில் ஐயமில்லை.

அரக்கோணம் தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சு. ரவி இரண்டு முறை, இங்கு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு மக்கள் பணி செய்துவருகிறார். பாதாள சாக்கடைத் திட்டம், அரசு கலைக் கல்லூரி மற்றும் ஏழு மேம்பாலங்கள் ஆகியவற்றை கொண்டுவந்த இவருக்கு மூன்றாவது வெற்றிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இதையும் படிங்க: மதுரை தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!

Last Updated : Mar 4, 2021, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.