மத்திய அரசின் டெல்லி மனிதவள மேம்பாட்டுத் துறை குழுவின் இணைச்செயலாளர் ராஜீப் குமார் சென் தலைமையிலான குழு அலுவலர்கள், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறை, சத்துணவு மையம், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களை ஆய்வுமேற்கொண்டனர்.
அப்போது, ஆசிரியர்கள் கற்பித்தல் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, காவேரிப்பாக்கம் அடுத்த பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற குழுவினர் அங்குள்ள கணினி ஆய்வகம், வகுப்பறைகள், நூலகம், கழிவறை உள்ளிட்ட இடங்களை ஆய்வுசெய்தனர்.
பின்னர் கடந்தாண்டை ஒப்பிட்டு தற்போது மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படைத் தேவைகள், மாணவர்களுக்கு வகுப்புகளில் பயிற்றுவித்தல் உள்ளிட்டவற்றை பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டறிந்து சென்றனர்.
இதையும் படிங்க:பைக் ஆசையால் தம்பதியைக் கொன்ற கல்லூரி மாணவர்கள் கைது