ETV Bharat / state

ராணிப்பேட்டை காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டுள்ளதாக ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு - காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம்

ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவரை மாற்றி, புதிய நிர்வாகியை நியமனம் செய்துள்ளதாக ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 19, 2023, 8:08 PM IST

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நகர கமிட்டி தலைவர் பதவியை அதிரடியாக மாற்றி புதிய தலைவராக R.K.குப்புசாமியை நியமித்துள்ளதாக நகரின் பல முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாலாஜா ரோடு, ரயில் நிலையத்தில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரின் செயல்பாடுகள் சரியில்லாததால் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் சார்பில் எழுந்ததாக கூறப்படுகிறது. சக நிர்வாகிகள் இதனை ஒரு மனதாக ஆதரித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பல ஆண்டுகளாக கட்சிக்கு பணியாற்றிய R.K.குப்புசாமியை புதிய நிர்வாகியாக நியமித்துள்ளதாக ராணிப்பேட்டையில் உள்ள முக்கியப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் ராணிப்பேட்டை காங்கிரஸ் கட்சியின் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குவார்ட்டருக்கு ரூ.10 அதிகம்.. "பில் குடு; இல்ல கடைய மூடு" மதுப்பிரியரின் வைரல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.