ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது பள்ளியின் வகுப்பறைகள் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (நவ.01) 1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை, பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 150க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அழைத்து வந்தனர்.
அப்போது, மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலில் உள்ள பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சிதலமடைந்த பள்ளியின் கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டி, கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிக் கட்டிடம் மூடப்பட்டே இருந்து.
பள்ளியை மூடிய பெற்றோர்கள்
பள்ளிக் கட்டிடத்தை அதிகாரிகள் அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக இருப்பதால், மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு பள்ளியில் இல்லை என்று மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பள்ளியைப் புறக்கணித்து பள்ளிக்கு பூட்டு போட்டடுள்ளனர்.
இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரத்தனகிரி காவல்துறை மற்றும் வட்டார கல்வி அலுவலர், பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
150 மாணவர்களுக்கு போதிய சமூக இடைவெளியுடன் பள்ளி கட்டிடம் இல்லாததால் புதிய கட்டடம் ஏற்படுத்தி வேண்டும் எனவும், பழைய கட்டிடத்தை உடனே அப்புறப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாட்னா தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை