ETV Bharat / state

கனமழையால் சேதமடைந்த குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி! - நெற்பயிற்கள் சேதம்

Minister R.Gandhi: ராணிப்பேட்டையில் மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக சேதமடைந்த பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

சேதமடைந்த குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் ஆர் காந்தி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 10:32 AM IST

சேதமடைந்த குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் ஆர் காந்தி

ராணிப்பேட்டை: வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில், தாழ்வான பகுதி மற்றும் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

அந்த வகையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து, மக்களை பாதுகாப்பாக தங்க வைத்து, அவர்களுக்கான உணவு மற்றும் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஜெயராம் பேட்டை பகுதியில் குடியிருப்பு பகுதிகள், தொடர் கனமழையால் பெரும் பாதிப்படைந்து இருந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் நேரில் சென்று சந்தித்தார்.

இதையும் படிங்க: ஆம்பூர் அருகே அசால்டாக அரசுப் பேருந்தில் 40 கிலோ கஞ்சாவை கடத்திய வட மாநில இளைஞர் கைது!

அப்போது, கனமழையால் முற்றிலுமாக இடிந்து விழுந்த வீட்டைப் பார்வையிட்ட அமைச்சர், அந்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தைச் சந்தித்து, அவர்களுக்கு அரிசி, ஆடைகள், பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும், நிவாரணத் தொகையும் வழங்கினார். மேலும், முழுவதுமாக இடிந்து விழுந்த வீட்டை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஆற்காடு, கலவை, வாலாஜாப்பேட்டை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாம்களில் இருந்த பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அமைச்சர், அம்மக்களுக்குத் தேவையான அரிசி மற்றும் மற்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வின் போது, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

முன்னதாக, ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டு இருந்த விவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்ட வேளான் துறை அதிகாரிகளிடம், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகளைக் கணக்கீடு செய்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் : சென்னை ஏரிகளின் தற்போதைய நிலை என்ன? நீர் மேலாண்மை வாரியம் கொடுத்த அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.