ETV Bharat / state

ஜெயலலிதா எப்படி இறந்தார்? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி! - உதயநிதி ஸ்டாலின்

ராணிப்பேட்டை: அதிமுக அரசு மீது 15,000 கோடி ஊழல் புகாரை ஆளுநரிடம் அளித்த பாமகவின் அன்புமணி, தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்திருப்பதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

udhayanithi
udhayanithi
author img

By

Published : Mar 16, 2021, 6:25 PM IST

Updated : Mar 16, 2021, 7:00 PM IST

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று, ஆற்காடு திமுக வேட்பாளர் ஈஸ்வரப்பனை ஆதரித்து, ஆற்காடு பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், ”மோடியின் அடிமையாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் செயல்படுகின்றனர். ஓ.பன்னீர் செல்வத்தை டயர் நக்கி என்றதோடு, அதிமுக அரசு 15 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக ஒரு பட்டியலையும் ஆளுநரிடம் கொடுத்த பாமகவின் அன்புமணி, தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்திருக்கிறார்.

தமிழக மக்களின் நலனுக்காக நிவாரணத் தொகை கேட்டால், மோடி அரசு வழங்க மறுப்பதோடு, தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பறிக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு இங்கில்லை. ஆனால், எடப்பாடி முதலமைச்சராக வந்தவுடன் நீட் தேர்வு வந்துவிட்டது. நீட் தேர்வால் கடந்த மூன்று ஆண்டுகளில் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால்தான் சொல்கிறோம் திமுக ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

மத்திய அரசு தற்போது புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து, இனிவரும் காலங்களில் செவிலியர், வழக்கறிஞர் ஆகிய படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் மூன்று, ஐந்தாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய இபிஎஸ்-ஓபிஎஸ்-ம், தலையாட்டி பொம்மைகளாக உள்ளனர்” என்றார்.

ஜெயலலிதா எப்படி இறந்தார்? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், ”அதிமுகவினர் வந்து ஓட்டு கேட்டால், ஜெயலலிதா எப்படி இறந்தார் எனக் கேளுங்கள். அவரின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் கேட்ட ஓ.பன்னீர்செல்வம், ஏன் அந்த கமிஷன் முன் இதுவரை ஆஜராகவில்லை என்றும் கேளுங்கள். திமுக அரசு அமைந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ’திமுக ஒரு அராஜகக் கட்சி’ - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Last Updated : Mar 16, 2021, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.