ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 84 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரக்கோணம் கோடம்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வளாகத்தில் கொள்முதலுக்காக கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் இந்த நெல் மூட்டைகள் மழையில் நினைந்து வருகின்றன.
வீனாகும் நெல் மூட்டைகள்
மேலும், உரிய கட்டட வசதிகள் இல்லாதன் காரணமாக வெயிலில் காய்ந்தும், மழையில் நினைந்தும் நெல்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் உழைப்பு வீனாகியும், அரசுக்கு பேரிழப்பும் ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கும், இந்த நெல் மூட்டைகள் உரிய முறையில் பயன்படுத்த கட்டடம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!