ராணிப்பேட்டை: பழைய சொரையூர் பகுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஊரின் குலதெய்வமான பொன்னியம்மன் திருவிழா மற்றும் எரு காட்டும் நிகழ்ச்சி தொன்றுதொட்டு பாரம்பரியமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று (ஜனவரி 18) எருகாட்டும் விழா அக்கிராம மக்களால் விமரிசையாக நடத்தப்பட்டது.
இந்த எருதுகாட்டும் திருவிழாவில் சீறிப் பாய்ந்த காளைகளை சொரையூரைச் சுற்றியுள்ள மாம்பாக்கம், மேல்புதுபாக்கம், ஆரூர், பொன்னமங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து வந்த கிராம மக்கள் கண்டு மகிழ்ந்ததோடு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்