ETV Bharat / state

'பாலாற்றில் வெள்ளம் ஏற்படலாம்' ராணிப்பேட்டை ஆட்சியர் மக்களுக்கு அறிவுரை! - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

ராணிப்பேட்டை: பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆற்றங்கரையோரமாக வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ராணிப்பேட்டை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

ஆட்சியர்
ஆட்சியர்
author img

By

Published : Dec 4, 2020, 8:02 PM IST

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில், பெய்து வரும் கனமழையின் காரணமாக பாலாற்றில் சுமார் 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நீர் நிலைகளில் யாரும் குளிக்க செல்ல வேண்டாம். அதே போல், ஆற்றின் வருகே வேடிக்கை பார்க்கவும் யாரும் செல்ல வேண்டாம்.

ஆற்றங்கரையோரத்தில் குடியிருப்போர் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.