ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கம்மவார் தெருவை சேர்ந்தவர் கோகுல். இவரை நான்கு பேர் அடங்கிய கும்பல் அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.
இதில் தலை, கையில் பலத்த காயம் ஏற்பட்டு கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவர் குறித்தும், கொலை செய்தவர்கள் யார் என்றும் கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
அரக்கோணத்தில் இளைஞர் வெட்டிக் கொலை - அரக்கோணம் கொலை சம்பவங்கள்
ராணிப்பேட்டை: அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.