ETV Bharat / state

அரக்கோணம் இளைஞர் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது! - ranipet district news

அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கம் கிராமத்தில் இளைஞர் கொலை வழக்கப்பட்ட வழக்கில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

arakkonam-murder-case-five-arrested
அரக்கோணம் இளைஞர் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது!
author img

By

Published : Jun 27, 2021, 10:35 PM IST

Updated : Jun 28, 2021, 1:18 PM IST

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டன்(31). சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 25ஆம் தேதி மாலை வடமாம்பாக்கம் கிராமத்திலுள்ள தன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கோதண்டன் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

இதுதொடர்பாக அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு கோதண்டனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அவரது உறவினர் முனுசாமி என்பவரின் மகன் மனோஜ், அவரது நண்பர்களான முகேஷ், சுனில், சுப்பிரமணி, 17 வயது சிறுவன் ஆகிய ஐந்துபேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: வில்வித்தை வீரரின் மூக்கை அறுத்த நபர்: தேடுதல் வேட்டையில் காவல்துறை

Last Updated : Jun 28, 2021, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.