ETV Bharat / state

போலீசுக்கு பயந்து தந்தையுடன் ஒளிந்த சிறுவன் - மின்சாரம் தாக்கி பலியான சோகம்! - 8 year old boy died in thandalam

ராணிப்பேட்டை அடுத்த தண்டலம் அருகே, குடும்பத் தகராறு காரணமாக விசாரிக்க வந்த காவல்துறையினருக்குப் பயந்து ஒளிந்து கொள்ள மகனோடு தந்தை சென்றுள்ளார். அப்போது ஒளிந்த இடத்தில் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

8 வயது சிறுவன் உயிரிழப்பு
8 வயது சிறுவன் உயிரிழப்பு
author img

By

Published : Jul 14, 2023, 7:36 PM IST

ராணிப்பேட்டை: தண்டலம் ஏரி கரை பகுதியைச் சேர்ந்த தம்பதியர்களான துளசிராமன் (34) மற்றும் சங்கீதா (30) ஆகிய இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு காரணமாக, தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் துளசிராமன் அதிகப்படியான மது அருந்திவிட்டு, தனது மனைவி சங்கீதாவிடம் தனிக் குடித்தனம் செல்வது குறித்து தகராறில் ஈடுபட்டதாகவும், இந்த தகராறு ஒரு கட்டத்தில் குடும்ப கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் ராணிப்பேட்டை காவல் துறையினரிடம் தெரிவித்த புகாரின் பெயரில், காவல்துறையினர் சங்கீதாவின் வீட்டிற்குச்சென்று விசாரணை மேற்கொள்ள சென்றுள்ளனர்.

அப்பொழுது காவல்துறையினர் வருவதைக் கண்ட துளசிராமன், தனது எட்டு வயது மகன் மணிகண்டன் என்பவனை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறமாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார். அங்கு ருக்மணி என்பவரது வீட்டில் பின்புறம் பதுங்கியுள்ளார். அப்பொழுது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியின் மீது மணிகண்டன் தவறுதலாக கையை வைத்ததில், 8 வயது சிறுவன் மணிகண்டன் மீது மின்சாரம் தாக்கி துடிதுடித்துள்ளார். இதனைக் கண்ட துளசிராமன் கூச்சலிட்டு கதறியதைக் கேட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சென்று மணிகண்டனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இருப்பினும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, 8 வயது சிறுவன் மணிகண்டனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். அப்போது மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் தெரிவிக்கையில், குடும்பத் தகராறு காரணமாக காவலர்கள் விசாரணைக்கு சென்றதாகவும், அதற்கு முன்பாகவே சிறுவனின் தந்தை மற்றும் தாய் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று பல மணி நேரமாகியும், வீடு திரும்பாத நிலையில், பிறகு மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாகவும், சடலத்தை மீட்டு வாலாஜா மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், உறவினர்கள் தரப்பில் கூறுகையில், காவல்துறையினர் வருவதை அறிந்த துளசிராமன், தனது 8 வயது மகன் மணிகண்டனை அழைத்துக் கொண்டு, பதுங்க சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கின்றனர். மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: "மணிப்பூர் கலவரத்தை அடக்கிவிட்டு பின்னர் தமிழகத்தை பற்றி பேசுங்க" - பாஜகவை விளாசிய திமுக எம்.பி ஆ.ராசா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.