தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே ரோந்து பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 2 டன் குட்கா, பான்மசாலா ஆகியவை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதில் தொடர்புடைய சின்னதம்பி, வில்சன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ரூ.30 லட்சம் மதிப்பிலான 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்!