ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கிறிஸ்துவ தெருவைச் சேர்ந்தவர் பாக்யராஜ் மகன் ஸ்டீபன் ராஜ். அதே தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது மகள் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குச் சென்று வருவதுமாக ஸ்டீபன் இருந்துள்ளார்.
செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தன் ஆசைக்கு ஏற்ப சிறுமியை பயன்படுத்தி வந்துள்ளார். இதைவீட்டில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததால் வீட்டில் சொல்லாமல் மாணவி மறைத்து வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் வயிறு பெரிதாக இருந்ததால் வீட்டில் சந்தேகம் அடைந்துள்ளனர். உடனே மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்க்கும்போது ஒன்பது மாதம் கர்ப்பமாக உள்ளார் என்று தெரியவந்துள்ளது. பின்னர் அந்த சிறுமி பெற்றோரிடம் முழு விவரத்தையும் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் ஸ்டீபனிடம் இந்த விபரத்தை பற்றி கேட்டபொழுது குடும்பத்துடன் அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் காவல் துறையினர் அவர் மீது கொலை மிரட்டல், வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது என வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.