கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாக, காவல் துறையினர், மருத்துவத் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெருந்தொற்றுக்கு எதிராக இவர்கள் தீவிரமாகப் போராடிவருகின்றனர். இருந்தபோதிலும், காவல் துறையினர் தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாக மனஅழுத்ததிற்கு உள்ளாகின்றனர்.
இவர்களின் மனச்சோர்வையும், மன அழுத்தத்தையும் போக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆண், பெண் காவலர்கள் என 100க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்மகரிஷி என்பவர் யோகா பயிற்றுவித்தார்.
இதில், டிஐஜி மயில்வாகனன் கலந்துகொண்டு யோகா செய்தார். யோகா செய்வதன் மூலம் நுரையீரல் புத்துணர்வு பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். காவலர்கள் தொடர்ந்து யோகா செய்து மன அழுத்தத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டனர். பயிற்சி முடிந்தபின்பு காவலர்களுக்கு மூலிகை கசாயம் வழங்கப்பட்டது. இந்த யோகா பயிற்சியின்போது காவலர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கந்தசஷ்டி கவசம்: மணலில் வேல் வடிவமைத்து விழிப்புணர்வு