ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, அரிமா சங்கம் ஆகியவை சார்பில் பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியானது பரமக்குடி ரயில் நிலையம் முதல் லயன்ஸ் பள்ளி வரையிலான 7 கி.மீ. தூரம் நடைபெற்றது. போட்டியை லயன்ஸ் சங்க உறுப்பினர் வனிதா கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி ரயில் நிலையத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி ஐந்து முனை, காட்டு பரமக்குடி ஆகிய ஊர்களின் வழியாக லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் முடிவடைந்தது. மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்குச் சான்றிதழும், வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: அம்பத்தூரில் நடைபெற்ற பெண்களுக்கான மாரத்தான் போட்டி