இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ரஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உலக மகளிர் தினவிழா ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டுவருகிறது. 2021ஆம் ஆண்டிற்கான உலக மகளிர் தினவிழாவில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு ஔவையார் விருது வழங்கப்படவுள்ளது. இதற்காக, கீழ்காணும் தகுதியான நபர்களிடமிருந்து கருத்துருக்கள் 29.12.2020-க்குள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.
மேற்காணும் வகையில் சாதனை புரிந்தவர்களாக இருப்பின் உரிய கருத்துருவுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி இணைப்பு படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பாக கூடுதல் தகவல் பெற 04567-230466 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த மனோன்மணி அம்பிகையின் திருக்கல்யாணம்!