ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி சுவாமி கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இக்கோயிலில் உள்ள ராமநாதசுவாமி, அம்பாள் அலங்காரத்திற்காக தங்கம், வெள்ளி, வைரம், பவளம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் உள்ளன. அவை கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நகைகளின் எடை குறித்து, 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மறு மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. அதில் நகைகளில் எடை குறைந்து இருப்பது தெரியவந்தது. அதனால், கோயிலில் பணியாற்றிவரும் ஓய்வு பெற்ற குருக்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமநாதசுவாமி கோயிலில் ஒரே நாளில் 2,200 பேர் சுவாமி தரிசனம்