ETV Bharat / state

'நாங்கள் எப்போதும் நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்' - அமைச்சர் மணிகண்டன்

ராமநாதபுரம்: "நீட் தேர்வை அதிமுக அரசு ஒருபோதும் ஆதரிக்காது" என்று தொழிற்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

author img

By

Published : Jul 7, 2019, 11:19 PM IST

அமைச்சர் மணிகண்டன்

ராமநாதபுரத்திலிருந்து மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய வழித்தடங்களில் வழியாக, புதிதாக இயங்க உள்ள 15 பேருந்துகளை, தமிழ்நாடு தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் இன்று ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், "கும்பகோணம் மண்டலத்திற்கு 300 பேருந்து புதிதாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ராமநாதபுரத்திலிருந்து இயங்கும்படி 15 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இயங்கி வரும் பழைய பேருந்துகள் விரைவில் மாற்றப்படும்" என்றார்.

நீட் மசோதா நிராகரிப்பு குறித்து கேட்டபோது, "தமிழ்நாடு அரசு ஒருபோதும், நீட் தேர்வுக்கு ஆதரவாகச் செயல்படாது. உச்சநீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களில் நீட் அமல்படுத்தப்பட வேண்டும் என நீட் தேர்வுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் பா.சிதம்பரத்தின் மனைவி நளினி. அவர்கள்தான் துரோகம் இழைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஹைட்ரோ கார்பனை சோதனை முயற்சிக்குக் கூட அனுமதிக்காது. ராமநாதபுரத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்" என்றார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் மணிகண்டன் பேசும்போது

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ். பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சதன்பிரபாகரன், அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Intro:இராமநாதபுரம்
ஜூலை.7
நாங்கள் எப்போதும் நீட் தேர்வுக்கு எதிரானவர்கள் அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டம்.

Body:இராமநாதபுரத்திலிருந்து மதுரை, திருச்சி, புதுக்கோட்டை,கும்பகோணம் ஆகிய வழித்தடங்களில் வழியாக புதிதாக இயங்க உள்ள 15 பேருந்துகளை தமிழக தகவல் தொழிநுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் இன்று இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து துவங்கி வைத்தர். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கூறிய போது கும்பகோணம் மண்டலத்திற்கு 300 பேருந்து புதிதாக ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் இராமநாதபுரத்திலிருந்து இயங்கு 15 பேருந்துகள் இன்று துவங்கி வைக்கபட்டு உள்ளன. மாவட்டத்தில் இயங்கி வரும் பழைய பேருந்துகள் விரைவில் மாற்றப்படும் என கூறினார். நேற்றைய தினம் மத்திய உள்துறை செயளர் தமிழக அரசு பரிந்துரை செய்த நீட் விலக்க மசோதாவை நிராகரிக்கப்பட்டதாக உயர்நீதி மன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் தமிழக அரசு ஒரு போது நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்படாது என்று மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டது தமிழக அரசு என்றும் கூறினார். உச்சநீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களில் நீட் அமல்படுத்தப்பட வேண்டும் என நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்பட்டவர் பா.சிதம்பரத்தின் மனைவி நளினி எனவும் அவர்கள்தான் துரோகம் இழைத்துள்ளதாகவும் கூறினார்.

தமிழக அரசு ஹைட்ரோ கார்பனை சோதனை முயற்சிக்கு கூட அனுமதிக்க முடியாது என்றார். இராமநாதபுரத்திற்க்கு மருத்துவ கல்லூரி அமைக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ். பரமக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சதன்பிரபாகரன், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.