ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரகலா நீண்ட விடுப்பில் சென்றுள்ளதால், தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மாவட்ட பொறுப்பு ஆட்சியராகப் பதவி வகித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு வணிக வரி இணை ஆணையராக இருந்த சங்கர்லால் குமாவாட், தற்போது ராமநாதபுர மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் 25ஆவது ஆட்சியராக பொறுப்பேற்ற சங்கர் லால் குமாவாட், பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மக்களுக்காகப் பணி
அதில்,"ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே சாதாரணமான மற்றும் உழைக்கும் வர்க்கம் அதிகமுள்ள மாவட்டம். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 24 மணி நேரமும் கடிகார முள் போல திறந்து இருக்கும்.
பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகி தேவையான உதவிகளைப் பெறலாம். மேலும், நான் அரசின் திட்டங்களையும், மாவட்ட வளர்ச்சியையும் முக்கியத்துவமாக கொண்டு பணியாற்றுவேன் " என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பின் அவசரகால மருந்துகள் பட்டியலில் கோவாக்சின்? அடுத்த வாரம் முடிவு!